pallar - mallar caste history

Mallar, Pallar Caste Tamil literature & Historical Proof – சேர,சோழ,பாண்டியர் வரலாறு

Devendra Kula Vellalar History Mallar/Pallar

மள்ளர் அல்லது பள்ளர் எனப்படும் சமுதாயத்தினர் தமிழகத்தில் பள்ளர், வாய்காரர், காலாடி, மூப்பன், குடும்பன், பண்ணாடி, தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.[3] இவர்கள் தங்களை தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்கிறார்கள். எனவே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள்.[4][5][6] பள்ளர் எனும் மள்ளர் இனத்தினர் தமிழ்நாடு சாதிகளின் அனைத்து பட்டியலிலும் உள்ளனர். கீழுள்ள ஏழு பள்ளர் உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பெயரை மாற்ற இந்த சமூகத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.[7]

தேவேந்திர குலத்தார், பட்டியல் சாதிகள் (எண் 17)
குடும்பன், பட்டியல் சாதிகள் (எண் 35)
பள்ளர், பட்டியல் சாதிகள் (எண் 49)
பன்னாடி, பட்டியல் சாதிகள் (எண் 54)
மூப்பன், பிற்படுத்தப்பட்டோர் (எண் 72)
காலாடி, பிற்படுத்தப்பட்டோர் (எண் 35)
காலாடி, சீர்மரபினர் (எண் 28)[8]
மள்ளர்
மொத்த மக்கள்தொகை 2,272,670000000000000
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு,கர்நாடகா,கேரளா, இலங்கை
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து, கிறிஸ்துவம்[2]
இதற்கிடையே பள்ளர்களின் வரலாற்றுப் பெயராக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கும் மள்ளர், மல்லர் என்ற பெயர்களும், நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பெயர்களும் உள்ளன. இந்திய அரசின் அமைச்சரவையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலும் பலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்றனர்.

மள்ளர் என்பதன் பொருள்
மள்ளர் என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள்.[சான்று தேவை]

‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்…’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது பிங்கல நிகண்டு.

சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன. பிற்கால பள்ளு சிற்றிலக்கியங்கள் பள்ளர் பற்றியும் அவர்களின் வேளாண் குடிபற்றியும் பல்வேறு செய்திகளைக்கொண்டுள்ளன.இவ்விலக்கியங்களில் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி, பண்ணாடி என பல பெயர்களில் பள்ளர்கள் அழைக்கப்படுகின்றனர்.[9] மேலும் பள்ளர்கள் இன்றுவரையிலும் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி எனும் பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர்.[சான்று தேவை]

நெல் முதலிய வித்துக்களை கண்டுபிடித்தல்
திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்பக்கம் உள்ள கல்வெட்டு

“ விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள்
திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள்
தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன்
துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும்
சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை
கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும்
வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே
கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல
கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து
தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை
கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல்
விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும்
பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும்
ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான்
நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப்
பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்,
அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப்
பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு
வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே
ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும்
வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம்
பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக்
கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு
2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும்
கட்டளையிட்டு நடக்கிற காலத்திலெ . . . . . ”
—- தென்னிந்திய கோயிற் சாசனங்கள்ஃ பாகம் ஐஐ எண் 863ஃ பக்கம் 803

சேர,சோழ,பாண்டியர் வரலாறு 

நெல், கரும்பு, வாழை, பனை முதலிய வித்துக்களையும் நீர்ப் பாசனத் தொழில் நுட்பத்தையும் முதன் முதலில் துவாபர யுகத்தில் கண்டுபிடித்த தெய்வேந்திரக் குடும்பன் பற்றிய செய்தியை மேலே காட்டப்பட்ட கல்வெட்டு கூறுகிறது.

மள்ளர் பற்றிய குறிப்புகள்
மள்ளர் காலாடி, ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். உழவர், வீரர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இவ்விருவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக

“ “அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்” ”
—- என்று திவாகர நிகண்டும்.

“ “செருமலை வீரரும் திண்ணியோரும்
மருத நில மக்களும் மள்ளர் என்ப” ”
—- என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன.

மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் வளமை – நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான்.

“ பிள்ளை தைவரப் பெருகுபால் சொரி முலைத்தாய்போல்
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கைவருட
வெள்ள நீரிரு மருங்குகால் வர்p மிதந் தேறிப்
பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி. ”
—- பெரியபுராணம், திருக்குறிப்புப் தொண்டர் நாயானார் புராணம், பாடல் 22.

இவர் விளைத்துக் குவித்த வானளாவிய நெற்குன்றுகள் மருத நிலத்தைக் மலைகளடர்ந்த குறிஞ்சி நிலமாகக் காட்டியது என்கிறார் இன்னொரு பாடலில்.

“ கைவினை மள்ளர் வானங் கரக்க வாக்கிய நெற் குன்றால்
மொய் வரை யுலகம் போலும் மளரிநீர் மருத வைப்பு. ”
—- பெரியபுராணம், – திருநாட்டுச் சிறப்பு, பாடல் 25

“ “குன்றுடைக் குலமள்ளர்” ”
என்னும் கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார்.

“ நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
இன மள்ளர் பரந்த கையில்
கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
எனப் பொலியும் தகையும் காண்மின் ”
—- கம்பராமாயணம்.

வானரர் களம் – காண் படலம், செய்யுள் 25. பழனிச் செப்புப்பட்டயம் கி.பி. 1528 (மள்ளர் மலர் அக்டோபர் 1998 பக. 20 – 21). கி.பி. 1528ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயர் காலத்திய செப்பேடான இது தற்சமயம் மதுரை அருங்காட்சியகத்தில் இருந்து திருட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது. [12]

இம்மக்களின் தோற்றம்; மற்றும் வரலாறு பற்றிக் கூறும். உலக மக்களுக்கு செந்நெல் அமுது படைப்பதற்காக சிவனும் உமையும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களைப் படைத்ததார்கள். இவர்கள் இப்பூமியில் செந்நெல் தோற்றுவித்தார்கள் என செப்புப்பட்டயம் பெருமைப்பட கூறும்.

தெய்வேந்திரர் வரலாறு
“ சிவனுயுமையும் மதிறுக் காஞ்சி தன்னில்
ஏகாம்பரரா இருந்தருள் புரிந்து
மதுரையை நோக்கி வரும் வழியதனில்
உலகலாமீன்ற உமையவள் மனதில்
திருவருள் தோன்றி சிவனிடத்துரைக்க
அரன்மன மகிழ்ந்து முகமது வேர்க்க
கரமதில் வாங்கி வரமதுக்கியந்து
வைகையில் விடுக்க
வருணன் பொழிந் துருழிக் காத்தடித்து
குளக் கரையதனில் கொடி வள்ளல் தாங்க
ஓமம் வளர்ந்து உற்ப்பணமாக
ஈசுவரி தேடி யிருளில் நடக்க
கூவிய சத்தம் குமரனை நோக்கி
வாரிடியடுத்து வள்ளலை வலபுறம் வைத்து
வலமார் பிய்ந்து அமுர்தம்
பொழிந்து அ~;த்தம் கொடுக்க
பாலன் நரிவு பணிவிடைக்காக
புரந்தரன் மகிழ்ந்து ப+ரித்தெடுக்க. ”
தெய்வேந்திரன் அன்னம் படைத்தல் :

“ கன்னல் சென்னல் கதழி பிலாவுடன்
தென்னை கமுகு செறந்த வெள்ளிலை
அன்ன மிளகு மாந்துளிற் மஞ்சள்
மல்லிகை முல்லை மகழி நுவர்ச்சி
பரிமள சுகந்தம் பாங்குடன் கொண்டு
தெய்வ சபையை தெரிசிக்க வென்று
காராவின் பாலை கரகத்திலேந்தி
சீறாக அன்னம் சிறப்பித்த போது. ”
தெய்வேந்திரன் விருதுகள் :

“ ஈஷ்வரன் மகிழ்ந்து இணைமுடி தரிக்க
அமரர்கள் மகிழ்ந்து இணைமுடி தரிக்க
அமரர்கள் மகிழ்ந்து அதிசயத் திவாகும்
விமரிசையாக விருது கொடுக்க
மாலயன் ருத்திரன் மகேஷ்பரன் மகிழ்ந்து
பொன்முடி யதனில் பூசன மணிய
வாடாத மாலை மார்பினி லிலங்க
வெட்டுப் பாவாடைகள் வீணைகள் முழங்க
செந்நெல் சேறாடி சிறப்புடன் சூழ
வெள்ளைக் குடையும் வெங்களிறுடனே
டாலுடம்மான சத்தம் அதறிட
மத்தாளம் கைத்தாமம் மகெஷ்பரத் துடனெ
எல்லா விருதும் இயல்புடன் கொண்டு
தெய்வ சபையை தெரிசனம் செய்து
பதினெட் டாயுதம் பாங்குட னெடுத்து
புரவியிலேறி பூலோக மதனில்
சென்னலா யெங்கும் சிற்ப்பிக்கும் போது
விசுவ கண்ணாளர் மேழியும் கொடுக்க
மூவராசாக்கள் முடிமணம் சூட்ட
செந்நெல்லை படைத்தோர்
குகவேலருளால் குடும்பன் தழைக்க
சிவனரளாலே திருநீறணிந்து
யெல்லா வுலகும் யிறவியுள் ளளவும்
தெள்ளிமை யாத செந்நெலை படைத்தோர்
சேத்துக்கால்ச் செல்வரான
செந் நெல் முடி காவரலான
முத்தளக்கும் கையாதிபரான
பாண்டியன் பண்டான பாறதகதபரான
அளவு கையிட்டவரான
மூன்று கைக்குடையாதிபரான
பஞ்ச கலசம் பாங்குடன் வயித்து
அஞ்சலித் தேவர்கும் அன்னம் படைத்தவரான
மண்ணை வெட்டிக் கொண்டு மலை தகத்தவரான
கடல் கலங்கினும் மனங் கலங்காத வல்லபரான
மாடக் குளத்தில் வந்துதித்தவறான
பரமசிவனுக்கு பாத பணிவிடை செய்கின்றவரான
தெய்வலோகத்தில் தெய்வேந்திரன் பிள்ளைகளாகிய
பழனித் தலத்தில் காணியாளனாகிய
கொங்குப் பள்ளரில் பழனிப் பண்ணாடி. ”
—– பழனிப் பட்டயம், வரி 195 – 217.

சங்க காலம் தொட்டு சென்ற நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட தமிழ் இலக்கியங்களில் இவர்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. நாட்டு வளம் என்னும் படலம் நெல் நாகரிகத்தின் மேன்மையையும் அம்மக்களின் சிறப்பையும் கூறும். ஏர் மங்கலம், வான் மங்கலம், வாள் (கலப்பையில் உள்ள கொழுவு) மங்கலம் உழத்திப்பாட்டு முதலியன அரசர்களுக்கு இணையாக இம்மக்களின் சிறப்பை உயர்த்திப் பாடும்.

பள்ளு இலக்கியம்
பள்ளர் என்ற பெயர் தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் பள்ளு இலக்கியத்தில் தான் வருகின்றது. தமிழில் தோன்றிய முதல் பள்ளு நூல் முக்கூடற் பள்ளு. பள்ளு இலக்கியம் சிற்றிலக்கிய வகையை சேர்ந்தது, சிற்றிலக்கிய வகையில் மிகுதியான நூல்களை கொண்டது. இது வடுகர் ( நாயக்கர் ) ஆட்சி காலத்தில் தோன்றியது. இந்த பள்ளு நூல்கள் இவர்களை பள்ளர் என்று அழைத்தாலும் இவையே ‘மள்ளர் தான் பள்ளர்’ என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றன.[13]

“ “மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்கோர்
பள்ளக் கணவன்” ”
—-முக்கூடற் பள்ளு

இவ்வாறு பல பள்ளு நூல்கள் இவர்களை மள்ளர் என்று கூறுகின்றன.[14]


1 thought on “Mallar, Pallar Caste Tamil literature & Historical Proof – சேர,சோழ,பாண்டியர் வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *