தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் குடி யார்?

Devendra Kula Vellalar History சேரர் வரலாறு சோழர் வரலாறு பாண்டியர் வரலாறு

மூவேந்தர் என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். மூவேந்தரில் மூத்தவன் பாண்டியன். அவனுக்கு பின்பு பல காலம் கழித்து வந்தவர்களே சேரனும், சோழனும். இந்திய மன்னர்களின் வரலாற்றில் எவருக்கும் இல்லாத பழம்பெரும் வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு. சேர, சோழ ,பாண்டியர்கள் ஆகிய மூவருமே சகோதரர்கள் என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச் செய்தி. வரலாற்று ஆதாரம் அற்றது.

மூவேந்தருக்கு உரிய சின்னங்கள்

  • சேரன் – வில்அம்புசேர-சோழ-பாண்டியர்-கொடி1
  • சோழன் – புலி
  • பாண்டியன் – மீன்

மூவேந்தருக்கு உரிய பூக்கள்

  • சேரர் – பனம்பூ
  • சோழர் – ஆத்திப்பூ
  • பாண்டியர் – வேப்பம்பூ

மூவேந்தர்களின் தலைநகரங்கள் 

  • சேரர் – வஞ்சி(கரூர்)
  • சோழர் – உறையயூர்
  • பாண்டியர் – மதுரை

மூவேந்தர்களின் துறைமுகங்கள்

  • சேரர் – தொண்டி
  • சோழர் – காவிரிபூம்பட்டிணம்
  • பாண்டியர் – கொற்கை

சேரநாடு மலையும் மலையைச் சார்ந்த நிலமும் ஆகும்.

சோழநாடு மிகவும் தொடக்க காலத்தில் இவ்வளவு வளமுடைய மருதநிலமாக இருந்திருக்கவில்லை. அது சதுப்புநிலமாக இருந்தது. கரிகாலன் முயற்சியால் காவிரிப் பாசனம் முறைப்படுத்தப்பட்டு வளம் தரும் மருதநிலமாக மாற்றப்பட்டது.

பாண்டிய நாட்டின் பெரும் பகுதி காடும் காடு சார்ந்த இடமும் ஆகும்.

பாண்டிய நாடு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமையைப் பெற்றிருந்தது. பாண்டியர் கட்டிடக்கலைக்கு சான்றாக இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கழுகுமலை குகைக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் என பல கோவில்கள் உள்ளன. இந்த அணைத்து கோவில்களிலும் இன்றுவரை முதல் மரியாதை, பரிவட்டம், தேர் இழுக்கும் முன்னுரிமை உடைய பாண்டிய மரபிரணான பள்ளர் / மள்ளர் / தேவேந்திர குல வேளாளர் உள்ளனர்.

தென்காசிப் பாண்டியர்களில் கொல்லங்கொண்டான் என்பவனே பாண்டியர் வரலாற்றில் அறியப்படும் கடைசி பாண்டிய மன்னனாவான். நெல்லையப்பரிடம் பேரன்பு கொண்ட கொல்லங்கொண்டான் ஆட்சிக் காலத்தில் நான்கு அரசப் பிரதிநிதிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இம்மன்னனின் அரண்மனை சிதிலமடைந்த நிலையில் ராஜபாளையம் அருகே உள்ள மூன்றாம் ராஜசிம்ம பாண்டியன் மகன் வீரபாண்டியனின் கி.பி 963 ல் பாறையில் செதுக்கப்பட்ட வட்டெழுத்து கல்வெட்டு உள்ள கிராம ஆளுமையான குடும்பர்கள் வசிக்கும் நக்கனேரி கிராமத்தின் மேற்கில் உள்ளது.

பதினான்காம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் ஏற்பட்ட சுல்தானியர், விஜயநகரத்தவர், நாயக்கர் படையெடுப்புகளால் பாண்டியர் தங்கள் பாரம்பரியத் தலைநகரான மதுரையை இழந்து தென்காசி, திருநெல்வேலி போன்ற தென்தமிழக நகரங்களில் சிற்றரசர்களாக வாழத் தலைப்பட்டனர். திருநெல்வேலியின் வரலாற்றுப் பழம் பெயர் “மருதவேலி” என்பதையும், இது மள்ளர்களின் ஊர் என்றும் வரலாறு கூறுகிறது. உலகின் பல நாடுகளை பாண்டிய மன்னர்கள் ஆண்டுள்ளனர். தமிழர் வணங்கும் சிவன் பாண்டிய பேரரசின் முதல் அரசன் என கடல் ஆராய்சியாளரான ஒரிசா பாலு அவர்கள் கூறியுள்ளார்.

ஈழத்தமிழர் போரில் தோற்றத்தால் அவர்கள் ஒன்றும் தாழ்த்தப்பட்ட அடிமைகள் என ஆகிவிடாது!!!

அதுபோலவே போரில் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட பாண்டியர்களை பள்ளு இலக்கியங்கள் மூலம் இழிவுபடுத்தி பழிதீர்த்த வடுக, நாயக்க மன்னர்களை காட்டிலும் தற்போதைய சில சாதிய அமைப்பினர் பாண்டியர் வரலாற்றை திருடுவது மட்டும் அல்லாது பட்டியல் பிரிவில் இருப்பதாய் காரணம் காட்டி பள்ளர் / மள்ளர் / தேவேந்திர குல வேளாளர் வரலாற்றை இருட்டடிப்பு செய்கின்றனர்.

அவர்களே உலகம் முழுவதும் பயனித்து பிற நாட்டு மக்களுக்கு உழவுத் தொழிலை கற்றுத் தந்தனர் என்பதற்கு ஆதாரமாக, அமேரிக்கா, பிரான்ஸ், இட்டாலி, ஜெர்மனி, நார்வே, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, உள்பட உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் 3000 இடங்களின், ஊர்களின் பெயர் பள்ளர், மள்ளர், பாண்டியர் என்றே உள்ளது என ஒரிசா பாலு அவைகள் தனது ஆராய்ச்சி முடிவுகளில் ஆணித்தனமாக கூறியுள்ளார்.

மொழிஞாயிறு தேவநேய பாவாணார்:

23 உலக மொழிகளின் இலக்கிய இலக்கணங்களைக் கற்று, 40-க்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிய “உலகத்தின் முதல் மொழி தமிழ்” “உலகின் முதல் மனிதன் தமிழன்” என்று நிருபித்துக்காட்டி, “தமிழ் உயர தமிழன் தானுயர்வான்” என்று சொன்ன மாமேதை மொழிஞாயிறு தேவநேய பாவாணார் பாண்டியர்களின் “போர் மறவர்கள்” என்பவர்கள் பள்ளர் எனும் மள்ளர்களே என்று தெளிவுப்படுத்தியுள்ளார். மறவர் என்ற சொல் வீரர் என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது என்று ஆய்ந்து கூறியுள்ளார்.

பள்ளர்களே பாண்டியர்கள்!
ஆம், அவர்களே எம் தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் குடி.

அதற்கான ஆதாரங்கள் பின்வருமாறு

1. சங்கரன் கோவில் – கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டு.

2. கேரள சாதிப்பட்டியலில் பள்ளர்களை பாண்டியன் என்று அழைப்பது (பள்ளன் = பாண்டியன்)

3. தென்காசி, செங்கோட்டை பகுதி பள்ளர்களின் நிலப்பதிவு பத்திர ஆவணங்களில் ‘பாண்டியர் குலம்’ என பதிவு.

4. மதுரை தலப்புராணம் – சிவனை ‘பரி மள்ளர்’ எனச் சொல்வது.

5. மதுரை தெப்பத்திருவிழாவில் அனுப்பானடி குடும்பருக்கு முதல் மரியாதை. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற காணொளி – https://www.facebook.com/MaruthamTamil24x7/videos/3671427042911905/?t=0

6. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாற்று நடவுத் திருவிழா (நாற்று நடவுசெய்ய பள்ளர் வயலுக்கு வருவது)

7. பாண்டியர்களின் வெண்குடைத் திருவிழா (இராசபாளையம்). [விரிவாக படிக்க!]

சேர சோழ பாண்டியர் கொடி

8. திருப்பரங்குன்றம் – தேவேந்திர குல வேளாளர் மடத்திற்கு பாண்டியவேந்தன் முருகன் மறுவீடு வருதல். [விரிவாக படிக்க!]

9. பழனி – பள்ளர் மடத்திற்கு முருகன் தெய்வானை மறுவீடு வருதல்.

10. மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு பள்ளர் மடத்திலிருந்து பச்சைப்பட்டு கொடுத்தல்.

11. மீனாட்சி அம்மன் கோவில் முதல் மரியாதை.

12. சங்கரன்கோவில் குடும்பருக்கு முதல் மரியாதை.

13. சிவன் ‘பள்ளராக’ மாறி நாற்று நடவு செய்யும் கோவை பேரூர் பட்டீசுவரர் கோயில் நாற்று நடவுத் திருவிழா.

14. மருதநிலத்தின் தலைவனே வேந்தர்கள் தான் என தொல்காப்பியம் சொல்வது.

15. முற்கால பாண்டிய வேந்தனான சிவனை பள்ளர்கள் தங்களது சமாதியில் நிறுவுவது.

16. திருச்செந்தூர்-முருகன் கோவிலின் கல்வெட்டு மற்றும் பழமையான மண்டபங்கள்.

17. பள்ளர்களின் நிலப்பதிவு ஆவணங்களில் இந்திரகுலம் என பதிவு செய்வது.

18. மூவேந்தர்களின் கொடியாக தொல்காப்பியம் கூறும் வெண்கொடி திருவிழா.

19. தொல்லியல் துறையால் ஒப்புக்கொள்ளப்பட்ட கோவலன் பொட்டல் எனும் பாண்டியர் இடுகாடு (தற்போதைய மதுரை பழங்காநத்தம் பள்ளர்களின் இடுகாடு). [விரிவாக படிக்க!]

சேர சோழ பாண்டியர் வரைபடம்

20. முருகனை மள்ளன் எனக்கூறும் திருமுருகாற்றுப்படை.

21. பாண்டியர் என்ற சொல்லின் வேர்ச்சொல் பளளர்-எனக்கூறிய தேவநேயப் பாவாணரின் வரிகள்.

22. கோவை அவினாசிலிங்கம் கோவிலில் சிவனுக்கும் பார்வதிக்கும் நடக்கும் திருக்கல்யாணம் பள்ளர்களின் மடத்தில் மட்டுமே நடப்பது.

23. உலகில் முதல் மாந்தன் தோன்றியதாக கூறப்படும் ஆதிச்ச நல்லூர் பரம்பில், ஆதிநித்த குடும்பனின் (குடும்பர் என்பது பள்ளர்களின் உட்பிரிவு) உறவினர்கள் மட்டுமே வாழ்வது. (ஆதிச்சநல்லூர் அருகே இருக்கிற பாண்டியராசா கோவில்). [விரிவாக படிக்க!]

24. சமீபத்தில் தொல்லியல் துறையால் கண்டுபிக்கப்பட்ட முற்கால பாண்டியர்களின் தலைநகர் மணலூர், கொந்தகை, குடும்பரின் தோப்பில் இருப்பது.

26. பள்ளர்கள் அதிகமாக வாழும் உக்கிரன்கோட்டையில் பாண்டியர்களின் கோட்டையை இரு தினங்கள் முன்பு தொல்லியல் துறை கண்டுபிடித்தது.

27. சென்னை பார்த்தசாரதி கோவிலின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பர்பற்றிய செய்தி.

28. நெல்லையப்பர், திருவல்லிப்புத்தூர், கழுகுமலை, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில், கரூர் மாரியம்மன் கோவில், துறையூர் வட்டம் உப்பிலியாபுரம், வளையப்பட்டி, பெரம்பலூர் வட்டம் அம்மாபாளையம், மற்றும் பல கோவில்களின் தேர் இழுக்கும் உரிமை (தேர் + வேந்தன் = தேவேந்திரன், மருத நிலத் தலைவன் ‘வேந்தன்’ வேந்தன் தெய்வமானத்தால் ‘தெய்வ வேந்தன்’ அவர் வழக்கில் ‘தேவேந்திரர்’ ஆக அழைக்கப்படுகிறார்)

29. சங்க கால இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் அனைத்திலும் மள்ளர், மள்ளர்கள் மட்டுமே, ஏன்? பள்ளர்களே மள்ளர்கள் என்று கூறிய அனைத்து வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்.

30. பாண்டியர்களை வீழ்த்திய நாயக்க மன்னர்கள் தமிழகத்தில் உள்ள வேறு எந்த சாதியைப் பற்றியும் நூல் இயற்றாத போது தங்களின் எதிரிகளான பாண்டியர்களான பள்ளர்களைப் பற்றி மட்டுமே இழிவாக கூற படைத்த பள்ளு நூல்கள், அதிலும் அவர்களை அறியாமல் அவர்களை கூறிய மள்ளர் = பள்ளர் = தேவேந்திரன் அனைவரும் ஒன்றே என்பதுவும் அவர்களே மூவேந்தர்கள் என்பதுவும் முக்கிய ஆதாரங்கள்.

31. மதுரை ஆதீனம் ஶ்ரீ லஶ்ரீ அருணகிரிநாத ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியுடன்
இராசஇராச சோழன் பேரவை வெளியிட்ட “நாயன்மார்களும் தேவேந்திர குல வேளாளர்களும்” ஆசிரியர் : கலா ரத்னவேல் புத்தகத்தில் 63 நாயன்மார்களில் 18 பேர்கள் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று காட்டியுள்ளார். சோழ பாண்டிய வேந்தர்களை தேவேந்திரகுல வேளாளர் என்றும் கூறுகிறார்

32. குஞ்சர மல்லன் என்னும் தென்குடும்பர் இராஜராஜ சோழனின் (தமிழ் அரசர்களில் பெரும் புகழுக்கு உரியவன்) நினைவிடம் (கேட்பாரற்று கிடக்கும் கல்லறை) பள்ளர்களின் தெருவில் அமைந்துள்ளது.

33. அருள்மிகு மீனாச்சி அம்மன் கழுத்தில் அணிந்திருக்கும் தாலி M வடிவில் இருக்கும், பள்ளர்குல பெண்கள் அணியும் தாலியும் M வடிவில் சொக்கர் மீனாட்சியுடன் காணப்படும். இது சிவமரபின் அடையாளமாகும்.

34. தஞ்சை பெருவுடையார் பெரிய நாயகி அம்மன் அணியும் தாலி M வடிவில் இருக்கும், சோழ மண்டலத்தில் உள்ள பள்ளர் குல பெண்கள் இதே தாலியை இன்றளவும் அணிகின்றனர் என்பது வெளிப்படை.

35. பழனி, அவினாசி, மதுரை, திருப்பரங்குன்றம் மேலும் பல கோவில்களின் மேற்கூரையில் பாண்டியர்களின் “மீன் சின்னம்” பொறிக்கப்பட்டுள்ளது. இதே மீன் சின்னம் அங்கு உள்ள பள்ளர்களின் மடத்திலும் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்.

36. குறிப்பாக கோவை பேரூர் கோவிலின் மீன் சின்னம் மற்றும் அதன் அருகில் உள்ள பள்ளர்களின் மடத்தில் உள்ள மீன் சின்னம். இதில் கோவை பேரூர் கோவிலும் பள்ளர் மடமும் ஒரேவிதமான கற்களை கொண்டு அதே காலகட்டத்தில் கட்டப்பட்டுள்ளதை தொல்லியல் துறை ஒத்துக் கொண்டுள்ளது.

37. கோவில்களின் அருகே கட்டுப்பட்டுள்ள மற்ற சமூகமடங்கள் எல்லாம் சில நூற்றாண்டுகளை மட்டுமே கடந்திருக்கும் வேளையில் பள்ளர் சமூகமடங்கள் எல்லாம் பல நூற்றுண்டுகளை கடந்துவிட்ட சான்றுகளை காணமுடியும்.

38. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஒரே புத்தகம் மீண்டெழும் பாண்டியர் வரலாறு (இந்த நூலை தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் 2012 இல் வெளியிட்டது) அப்புத்தக ஆசிரியர் செந்தில் மள்ளர் பள்ளர்களே பாண்டியர்கள் என்பதை கள ஆய்வுகள் மூலமாகவும் அசைக்க முடியா ஆதாரத்துடனும் கூறியிருக்கிறார். அவர் இதனை மறுப்பவர்க்கு ரூபாய் 10 லட்சம் பரிசு அறிவித்திருந்தார். இதுவரை யாரும் இதை மறுக்க முடியவில்லை. அதனால் தமிழ்நாடு அரசு 2013 ஆம் ஆண்டு இப்புத்தகத்தை மட்டும் தடைசெய்தனர்.

7 ஆண்டுகள் ஆராய்ச்சிப் பணி செய்து இந்த நூலை ஆசிரியர் செந்தில் மள்ளர் 644 ஆவணங்களை ஆராய்ந்து எழுதியதாகக் கூறியுள்ளார். மேலும் உயர்நீதிமன்றம் இப்புத்தகத்தின் தடையை 2017 ஆம் ஆண்டு நீக்கியது. தமிழ்நாடு அரசு இப்புத்தகத்தின் உண்மை தன்மையை ஏற்றுக்கொண்டது.

39. ஒரு காலத்தில் உலகத்தில் பல இடங்களில் மூவேந்தர்கள் ஆட்சி செய்தார்கள் என்பதற்க்கு அடையாளமாக பல நாடுகளில் மள்ளர் (பள்ளர் ) அடையாளங்கள் இன்னும் இருப்பது.
(தேவைப்பட்டால் google இணையத்தளத்தில் pallar, palleres, kaladi, என்றும் முகநூலில் fayaz kaladi, pallas, pallar என்று தேடிப்பார்க்கவும், ஹரப்பா, மொகஞ்சதரா (தற்போதைய பாகிஸ்தான்) மற்றும் உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்கள் அதாவது பாண்டியர்களின் ஆட்சிக்குகீழ் இருந்த நாடுகளில் வசிக்கும் மக்கள் இன்றும் தங்கள் பெயருடன் காலாடி, பள்ளர், pallars என்று வைத்துள்ளதை காண முடியும்)
40. பாண்டியர்கள் ஆண்ட பெரு நாட்டில் இன்றும் ‘காலாடி கடற்கரை’ என இருப்பது. (காலாடி BC-DNC – பள்ளர்களின் உட்பிரிவு)
41. கொரியா நாட்டை ஆண்ட பாண்டிய இளவரசி கையில் நெல் நாற்றுடன் இருப்பது
42. கிரேக்க நாட்டை ஆண்ட மன்னனின் மகன் பெயர் பாண்டிய பள்ள என கிரேக்க வரலாறு கூறுவது.
பள்->பண்டு->பண்டியம்->பாண்டி(மாடு)->பாண்டியன்
இதுபோல் இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம். இடம் பத்தாது.

பாண்டியர்களின் இந்திர விழாவாக தொடங்கி பின்னர் அவர்களின் வெற்றியின் சிறப்பை பாருக்கு வெளிப்படுத்தும் வெற்றிவிழாவாகவும் தேவேந்திரர்கள் கொண்டாடுவது அவர்களே வேந்தர் மரபு என்பதனை மிகதெளிவாக உறுதி செய்கிறது.


9 thoughts on “தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் குடி யார்?

  1. வரலாற்றை திருத்தி பல கால கட்டங்களில் பதிப்பு ஏற்பட்டிருக்கலாம் ! ஆனால் கல்வெட்டுகளும், செப்பேடுகளும், அகழ்வு ஆராய்ச்சிகளும் உண்மையை பறைசாற்றுகின்றன. இதை யாராலும் மாற்றவும், அழிக்கவும் முடியாது!

  2. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ராமசாமி நாயக்கரே உங்கள் இந்த நிலைமைக்கு காரணம்… ஆனால் நீங்கள் அவரை நல்லவர் போல் நினைத்து வணங்குகிறிர்கள்…

  3. மிகவும் நன்றி மீண்டும் எழும் பாண்டியர் வரலாறு …

  4. ராஜபாளைய வெண்கொற்றக்குடை திருவிழா சித்திரை1ல் நடக்கும்..கொடையைவிட சிறப்பு கொடையைவைத்து ஆடுபவரின் காலில் ஒத்தை வீரக்கழல் இருக்கும்.அதை எட்டுமுழவேட்டியை காலில் சுற்றிதான் அதன்மேல் அக்கழல் நிற்கும்..அவ்வளவு விட்டம் கொண்டது…அதனுள் இருப்பது
    3 ம் நூற்றாண்டுகால கண்ணகியின் தாலி…அவள் கணவனை வெட்டப்பட்ட இடம் கோவலன் பொட்டல் என இன்றும் மதுரையில் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *