karnan-tamil-movie

கொடியன்குளம் கலவரம் நடந்த ஆண்டு(1995) குறித்த கர்ணன் பட சர்ச்சை – விளக்கம்

Cinema Devendra Kula Vellalar கொடியன்குளம் கலவரம்

கொடியன்குளம் கலவரம் நடந்த ஆண்டு 1995, அதிமுக ஆட்சியில் தான். அதற்காக தான் திமுக விற்கு ஓட்டு போட்டுடோம். ஆனால் திமுக மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை நடத்தியது. பிறகு மறுபடியும் அதிமுக விற்கு ஓட்டு போட்டோம். அ.தி.மு.க பரமக்குடி துப்பாக்கிச் சூடு (2011) நடத்தியது.

மாஞ்சோலை படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியோ, இழப்பீடையோ திமுக அரசு சரி செய்து தங்களை சுத்தப்படுத்திக்கொண்ட வரலாறு ஏதும் இல்லை. அதேபோல் அ.தி.மு.க வும் நீதி தரவில்லை.

தமிழகத்தில் மாரி மாரி ஆட்சி செய்யும் போது பட்டியல் இன மக்கள் சாதியக்கொலை, ஆனவக்கொலை செய்யப்பட்டது எல்லாம் பிரச்சினை இல்லை. யார் ஆட்சியில் நடந்தது? எந்த ஆண்டு நடந்தது? தான் பிரச்சினை #கர்ணன்.

மாஞ்சோலை படுகொலைப் பற்றிய ஆவணப்படம் இது நிட்சயமாக பாருங்கள். ( https://youtu.be/FAN7csb2h0w ) கர்ணன் பட சர்ச்சை சரி தவறென்ற உரையாடல் சரியானதுதானா என்பதை உங்கள் மனசாட்சியே சொல்லும். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *