pongal 2019

பொங்கல் திருவிழா பற்றியதோர் புரிதலுக்கான பதிவிது!!

Agriculture Devendra Kula Vellalar Mallar Pallar

வேளாண்மைக்கான ஆதாரம் மழை. மழைக்கடவுளான தேவேந்திரனை நோக்கி மழை வேண்டி உழவர்கள்  கொண்டாடியதே  இந்திர_விழா. அறுவடையில் நெல், உளுந்து உள்ளிட்ட ஏனைய பயிர் வகைகளை தூற்றிய பின் மிஞ்சியிருக்கும் காய்ந்த மற்றும் தேவையற்ற ஏனைய பொருட்களை  தீ வளர்த்து வேள்வியிலிட்டு மழைக்காக தேவேந்திரனை வேண்டி வணங்குவதே பொங்கல் கொண்டாட்டத்தின் முதல் நாளான  அறுவடைத்_திருநாள் (போகி என்பதெல்லாம் போக்கற்றவர்களின் பொல்லாப் பதம்)!
செங்கரும்பு பந்தலிட்டு, கிழக்கு நோக்கி புத்தரிசி பொங்கலிட்டு கதிரவனுக்கு முதல் படையலிடுவதே தமிழர் திருநாள்

உழவின் உயிர்மூச்சான தண்ணீரை கடல், ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளிலிருந்து தன்னகத்தே ஈர்த்து கார்மேகக் கூட்டங்களின் ஊடே மழையாய் பொழியச் செய்ததோடு மட்டுமல்லாமல், உயிர் மற்றும் பயிர் வாழத் தேவையான உயிர்ச்சத்தையும் வழங்குவதால் இந்த நன்றிக்கடன் கதிரவனுக்கு


உழவுக்கு உகந்த வகையில் உடலுழைப்பையும், தங்களின் கழிவுகளையே உரமாகவும் ஈந்து உழவர்களுக்கு உற்ற துணையாக விளங்கும் காளைகளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் பொருட்டு கொண்டாடுவதே மாட்டுப்_பொங்கல்!

தேவேந்திரன், கதிரவன், காளைகளுக்கு முறையே முதல் மூன்று நாட்கள் ஒதுக்கிய பின்பே கடைசியாக நான்காம் நாளாய் தங்களுக்கென #உழவர்_திருநாளை  ( காணும் பொங்கல் என்பதுவும் கட்டுக்கதையே)  கொண்டாடுவதே தமிழர்களின் மான்பு!!! 
உயிர் காக்கும் உழவர்களுக்கும், உலகத் தமிழர்களனைவர்க்கும் இனிய தமிழர்_திருநாள் வாழ்த்துகள்!!!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *