தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்படுபவர் யார்?

Devendra Kula Vellalar History

1765ம் ஆண்டு வரை தமிழகத்தையும் இந்தியாவையும் மாறி மாறி ஆண்டவர்களும் கடல் கடந்து மலேசியாவை இலங்கையை பர்மாவை சிங்கப்புரை இன்னும் ஏனைய பல நாடுகளையும் தமது வாளின் வலிமையால் இணையில்லா வீரத்தால் மேன்மையுள்ள இராஜதந்திரத்தால் வென்று ஆட்சி புரிந்து எல்லையில்லாப் புகழ் படைத்து சகல சங்கத்தமிழ் இலக்கியங்களும் போற்றிப்புகழ்பாடும் சேர சோழ பாண்டிய அரச பரம்பரையினராகிய மள்ளர் குலத்தவர்களே! மள்ளர் என்றால் உயர்குலத்தவர் எனப்பொருள்படும்.
அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்
– என்று திவாகர நிகண்டும்.
செருமலை வீரரும் திண்ணியோரும்
மருத நில மக்களும் மள்ளர் என்ப
என்று பிங்கல நிகண்டும் பொருள் இயம்புகின்றன.
உழவர் என்பதற்கு தொல்காப்பியம் வேளாளர் எனப்பொருள் கூறுகின்றது.பின் நாட்களில் உழவுத்தொழிலில் இறங்கிய சில சாதிப்பிரிவினர்களும் குல உயர்வு கருதி தங்களையும் வேளாளர்களென அழைக்க முற்பட்ட பொழுது அரச பரம்பரையினராகிய மள்ளர் குலத்தவர் தங்களை மற்றவர்களிலிருந்து வேறுபிரித்து தாம் மேல்க்குலத்தவர் எனப்பொருள்படும்படி தம்மைத் தேவேந்திரகுல வேளாளர் என அழைத்தும் ,பிறரால்( தமிழகத்தில்)அழைக்கப்பட்டும் வருகின்றனர்.

தேவந்திரகுல வேளாளர் எனும் அரச மரபுப்பெயர் 2011 ஜனவரியிலிருந்து இலங்கைக்கு நடைமுறைக்கு வந்துவிட்டது.இலங்கை (யாழ்ப்பாண மாவட்டம் உட்பட)வாழ் மள்ளர் குலத்தவர் யாவரும் இப்பெயரையே இனிமேல் தங்களுக்குத் தரித்துக்கொள்ள வேண்டுமென்பது” உலக தேவந்திரகுல வேளாளர் பேரவை”யால் இம்மக்களை நோக்கி வைக்கப்பட்ட கட்டளையாகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *