மறைக்கப்பட்ட மள்ளர் வரலாறு! தமிழர் அறிய வேண்டிய உண்மைகள்

Devendra Kula Vellalar History

தலைவர்கள் பார்வையில் பள்ளர் மள்ளர் தேவேந்திர குல வேளாளர்களை பற்றிய கருத்துக்கள்.

பாரதியார் – ஒடுக்கப்பட்ட பட்டியலில் பள்ளர்களை வைத்ததை எதிர்த்து ஆங்கிலேயர்களிடம் போராடி தோற்றபின் – பள்ளர்களுக்கு சுதந்திரம் கிடைத்தால் தான் இந்நாட்டிற்கு சுதந்திர கிடைத்ததாக அர்த்தம் என்று ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்று பள்ளு பாடல் எழுதியதோடு இல்லாமல் தன் மகளை இச்சமுகத்திற்க்கு மருமகளாக்க முற்பட்டார்.

பள்ளு இலக்கியங்கள், பழந்தமிழ் வேளாண்மைக் குடிகளான பள்ளர்களின் வாழ்க்கை பற்றியவை.

நன்றி – (https://www.youtube.com/watch?v=anpGfYc3szM)

கக்கன் – விவசாய குடியான பள்ளர் / மள்ளர் / தேவேந்திர குல வேளாளர்கள் பெரும்பாலான கோவில்களில் முதல் மரியாதை பெறுபவர்கள் ஆகையால் depressed class யில் வைத்ததை வெளியேற்றி பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று ராஜாஜி அவர்கள் முதல்வராக இருந்த சமயத்தில் வாதாடினார் (ஆனால் ராஜாஜி அவர்கள் தொழில் தெரிந்தவர்களை மேலே கொண்டு வந்தால் நமக்கு சாப்பாடு யார் போடுவது என்று, கக்கன் அவர்களின் கருத்தினை ஏற்காமல் எங்களை s.c என்று அறிவித்தார்).

பள்ளர்களுக்கு முதல் மரியாதை செய்யப்படும் கோவில்கள்[full list]

காமராஜர் – தான் முதல்வரான பின்பு, ராஜாஜி அவர்களின் செல்வாக்கை மீறி பள்ளர்களை பட்டியலிருந்து மத்திய அரசிடம் பரிந்துரைத்து மீட்க முடியவில்லை என்றாலும், மாணவ மாணவிகள் படிக்கும் மூன்றாம் முதல் ஐந்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் “முக்கூடற்பள்ளு” என்கிற பள்ளேச பாடலை வைத்து, பள்ளர்கள் என்றால் விவசாயி என்கிற மனோபாவத்தை அனைத்து சமுக மக்களிடமும் சேர்த்தார்.

மொழிஞாயிறு தேவநேய பாவாணார் – 23 உலக மொழிகளின் இலக்கிய இலக்கணங்களைக் கற்று, 40-க்கும் மேற்பட்ட நூல்கள் & 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி
உலகத்தின் முதல் மொழி தமிழ்” “உலகின் முதல் மனிதன் தமிழன்” என்று நிருபித்துக்காட்டி, “தமிழ் உயர தமிழன் தானுயர்வான்” என்று சொன்ன மாமேதை தேவநேய பாவாணார் பள்ளர் எனும் மள்ளர்களே பாண்டியர்கள் என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.

ராமதாஸ் (பாட்டாளி மக்கள் கட்சி) – பள்ளர் / மள்ளர் / தேவேந்திர குல வேளாளர்களை தவறாக ராஜாஜி தாழ்த்தப்பட்ட வகுப்பில் 1952 ல் வைத்து விட்டார், வன்னியர்களை போன்று பள்ளர்களும் சத்திரிய வம்சாவளியினர் ஆவார்கள், நாங்களே மூத்த தமிழ் குடினர் என்று கூறி பாட்டாளி மக்கள் கட்சி என்று துவங்கி,மாநில தலைவர் பதவியில் வன்னியரும் மாநில செயலாளர் பதவியில் பள்ளரையும் வைத்து இன்று வரையிலும் வழிநடத்துகிறார்.

நன்றி – [https://www.dinamani.com/tamilnadu/2019/mar/03/ஆறு-பட்டியலினத்தவரை-தேவேந்திரகுல-வேளாளர்-என-அழைக்கும்–அரசின்-முடிவு-ராமதாஸ்–வரவேற்பு-3106708.html]

ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் கட்சி) – பள்ளர்களும் நாங்களும் சகோதரதுவத்துடன் பழகிறோம், கொங்கு பகுதியில் பல கோவில்களில் பள்ளர்கள் தேர் வடத்தை தொட்டு கொடுத்த பிறகு தான் கவுண்டர்களாகிய நாங்கள் தேர் இழுக்கிறோம்…. எங்கள் கவுண்டர் சமுதாயத்தில் பல பிரிவுகளை சேர்த்து ‘கொங்கு வேளாளர் கவுண்டர்கள்’ என்று எப்படி அழைக்கிறோமோ அதே போன்று, பள்ளர்களின் பிரிவுகளை ஒன்று அடக்கி தேவேந்திர குல வேளாளர்கள் என்று அரசுகள் தெரிவிக்க வேண்டும்.

குருமூர்த்தி (துக்ளக் ஆசிரியர்) – நான் இந்த பெருமை மிக்க தேவேந்திர குல வேளாளர்களில் பிறக்கவில்லையே என்று ஏங்கி கொண்டிருக்கிறேன், இவர்கள் தாழ்த்தப்பட்டவர்களில் இருக்க எந்த தகுதியும் இல்லை.

தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை) – எங்கள் வேளான் குடியின் தாய் சமுகமான பள்ளர்களை, தேவேந்திர குல வேளாளர்கள் என்று பெயரை மாற்றி பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற கோரி நாங்கள் கடைசி வரையில் மக்களை ஒன்றினைத்து போராடுவேன்.

திருமாறன் (தென்னிந்திய பார்வார்டு பிளாக்) – ஒரு சமுகம், தங்களை தாழ்த்தப்பட்ட இனத்தில் இருப்பதே கேவலம் என்று கருதி எங்களுக்கு சலுகைகள் வேண்டாம் இடக்ஒதுக்கீடு வேண்டாம் என்று முன்வருகிறது என்றால் அதனை நான் வரவேற்று அவர்களுடன் நான் துணையாக நிற்ப்பேன்.

கவிக்கோ அப்துல்ரஹ்மான் – பள்ளர்களா இங்கே அடிமை தாழ்த்தப்பட்டவன், மொத்த தமிழ் இனமும் பள்ளர்களின் கிளை சமுகம் தான். நடோடியாக வாழ்ந்த மனிதன், ஓர் இடத்தில் குடியிருந்து உருவான / உருவாக்கிய சமூகம் பள்ளர் மள்ளர் தேவேந்திர குல வேளாளர் சமூகம்.

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) – வன்னியரகளாகிய நாங்களே தெற்க்கில் பள்ளர்,பள்ளர்களாகிய அவர்களே வடக்கில் வன்னியர்,நாங்கள் இருவரும் ஓர் தாய் மக்கள், வன்னியர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருக்கும் போது அவர்கள் எப்படி தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருக்க முடியும்.

ஒரிசாபாலு (தமிழ் தொன்மை மற்றும் கடல் சார் ஆராய்ச்சியாளர்) – பள்ளர்களின் வரலாறு இன்றி தமிழர்களின் வரலாறு யாராலும் எழுத முடியாது, உலகிற்க்கே விவசாய சொல்லி கொடுத்த அவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பில் நாம் வைத்திருந்தால் அது ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்திற்க்கும் அவமானம்.

எச்.ராஜா மற்றும் அமித்ஷா பட்டேல் (பாரதிய ஜனதா) – பள்ளர்கள், தாழ்த்தப்பட்டோர்களுக்கான ஆலய நுழைவு போராட்டம் நடந்த காலகட்டத்திலே பல கோவில்களிகளில் பரிவட்டம் வாங்கியவர்கள். பட்டியல் இனத்தில் இவர்கள் இருக்க கூடாது என்று நாங்கள் மட்டும் இல்ல, விவசாயிகளாக தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்த பள்ளர்கள் தான் இன்று வட இந்தியாவில் படேல் சமுகமாகவும், குருமி சமுகவாகவும், கவுடா சமுகமாகவும் இன்னும் சில சமுகவமாகவும் இன்று பிற்படுத்தப்பட்ட பட்டியலில் வாழ்கிறோம். ஆனால் எங்கள் தாயான பள்ளர்கள் அவல நிலையில் வாழ்கிறாள் என்றால், அதை எங்களால் பார்த்து கொண்டு இருக்க முடியாது அவர்களை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்றங்கள் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.

A.G. ஸ்ரீனிவாசன் பிள்ளை(பிள்ளை என்றால் ஆற்று கரையோரத்தில் வாழ்ந்த பள்ளர்கள்)
ஆசிரியர்- இந்திர குல போதிரி நாளிதழ்,
& தலைவர்,தேவேந்திர குல சபா,
மெட்ராஸ் மகானம். பள்ளர் மள்ளர் தேவேந்திர குல வேளாளர் ஆகிய நாங்கள் இன்று வரை மதுரை மீனாட்சி, பழனி, நெல்லையப்பர், தென்காசி சிவபெருமான், திருபரங்குன்றம், பேரூர்,திருச்செந்தூர், போன்ற தமிழகத்தின் வரலாறு மிக்க கோவில்களில் முதல் மரியாதையும் பரிவட்டமும் பெற்று வருகிறோம். தமிழர் பண்பாடான இந்திர குல விழா, சித்திரை திருவிழா, உழவர் திருநாள்.

“அலங்காநல்லூர் வாடிவாசலில் ஜல்லிக்கட்டு விடும் காளைகளில் தேவேந்திரர் காளைக்கு முதலில் மரியாதை செலுத்திய பின்பு தான் மற்ற காளைகள் களத்தில் இறங்கும்”

வரலாறு சிறப்பு மிக்க பள்ளர் – மள்ளர் – தேவேந்திர குல வேளாளர்களை ஆதி திராவிடர் என்கிற பட்டியலில் வைத்திருப்பதை நீக்க வேண்டும்.


7 thoughts on “மறைக்கப்பட்ட மள்ளர் வரலாறு! தமிழர் அறிய வேண்டிய உண்மைகள்

  1. உழுவோர் உலகத்தாரக்கு ஆணீ Devendrar மீண்டும் நாட்டை ஆளும் நாள் வெகு அருகில் உள்ள து.

  2. Pallarkale Pandiyarkal Pandiyarkale pallarkal pandiya Devendrakula velalar sangam singapore

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *