தலைவர்கள் பெயரில் இயங்கிய போக்குவரத்துக் கழகங்கள் பெயர்கள் மாற்ற என்ன காரணம்?

Devendra Kula Vellalar Dr Krishnasamy

தென்மாவட்டங்களில் 1997ம் ஆண்டு வீரன் சுந்தரலிங்கம் அரசு போக்குவரத்து கழகம் சில பிரச்சினைகள் காரணமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வீரன் சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்து கழகம் இயங்க வில்லை என்றால் தமிழ்நாட்டில் எந்த தலைவர்கள் பெயரிலும் போக்குவரத்து கழகம் இயங்க கூடாது என்று போராட்டம் நடத்தினர். அதன் பிறகு அனைத்து தலைவர்கள் பெயரில் உள்ள போக்குவரத்து கழகம் மாற்றம் செய்ய பட்டது.

போக்குவரத்துக் கழகத்தின் பழைய பெயர்(1997முன்பு) போக்குவரத்துக் கழகத்தின் தற்போதைய பெயர் செயல்படும் இடங்கள் தலைமையகம்.

பல்லவன் (PTC) மாநகர் போக்குவரத்துக் கழகம் (மா.போ.க) சென்னை தென் சென்னை சென்னை.

டாக்டர்.அம்பேட்கர் (DATC) மாநகர் போக்குவரத்துக் கழகம் (மா.போ.க) சென்னை வட சென்னை சென்னை.

தந்தை பெரியார் போக்குவரத்து கழகம் (TPTC) விழுப்புரம் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் & புதுச்சேரி விழுப்புரம்.

பட்டுக்கோட்டை அழகிரி தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) விழுப்புரம் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் வேலூர்.

எம்ஜியார் போக்குவரத்து கழகம் (TNSTC) விழுப்புரம் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் காஞ்சிபுரம் .

சோழன் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (CNTC) கும்பகோணம் தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் & காரைக்கால் கும்பகோணம்.

தீரன் சின்னமலை தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (DCTC) கும்பகோணம் திருச்சிராப்பள்ளி நகரம், திருச்சிராப்பள்ளி கிராமம், கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் திருச்சி.

மருது பாண்டியர் போக்குவரத்து கழகம் (MPTC) கும்பகோணம் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் காரைக்குடி.

வீரன் அழகு முத்துக்கோன் போக்குவரத்து கழகம் (AMTC) கும்பகோணம் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை.

சேரன் போக்குவரத்து கழகம் (CTC) கோயம்புத்தூர் கோயம்புத்தூர் நகரம், கோயம்புத்தூர் கிராமம், திருப்பூர் மாவட்டங்கள் கோயம்புத்தூர்.

பாரதியார் போக்குவரத்து கழகம் (BTC) கோயம்புத்தூர் நீலகிரி மாவட்டம் உதகை .

ஜீவா போக்குவரத்து கழகம் (JTC) கோயம்புத்தூர் ஈரோடு மாவட்டம் ஈரோடு .

அண்ணா போக்குவரத்து கழகம் (ATC) சேலம் சேலம் நகரம், சேலம் கிராமம், நாமக்கல் மாவட்டங்கள் சேலம்.

அன்னை சத்தியா போக்குவரத்து கழகம் (ASTC) சேலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் தருமபுரி.

பாண்டியன் போக்குவரத்துக் கழகம் (PNTC) மதுரை மதுரை மாவட்டம் மதுரை.

கட்டபொம்மன் அரசுப் போக்குவரத்துக் கழகம் (KTC), திருநெல்வேலி திருநெல்வேலி நகரம், திருநெல்வேலி கிராமம், தூத்துக்குடி மாவட்டங்கள் திருநெல்வேலி.

நேசமணி போக்குவரத்துக் கழகம் (NTC), கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்.

ராணி மங்கம்மாள் போக்குவரத்து கழகம் (RMTC) மதுரை திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் திண்டுக்கல்.

வீரன் சுந்தரலிங்கம் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (VSTC) மதுரை விருதுநகர் மாவட்டம் விருதுநகர்.

திருவள்ளுவர் மாநில விரைவு போக்குவரத்துக் கழகம் (TTC) தமிழ் நாடு உள் மற்றும் வெளி மாநில சென்னை.

JJTC (renamed as RGTC [ராஜிவ் காந்தி]) மாநில விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC) தமிழ் நாடு வெளி மாநில சென்னை.

கட்டுரை; நெல்லை சிவா.


3 thoughts on “தலைவர்கள் பெயரில் இயங்கிய போக்குவரத்துக் கழகங்கள் பெயர்கள் மாற்ற என்ன காரணம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *