பாண்டியர் வரலாறு பள்ளர் வரலாறு

கோவலன் பொட்டல் – மதுரை பாண்டியர் வரலாறு மறைக்கப்பட்ட உண்மைகள்!

Devendra Kula Vellalar History பாண்டியர் வரலாறு

மதுரை கோவலன் பொட்டல்

கோவலன் பொட்டல் என்ற இடம் தென்மதுரையைச் சேர்ந்த பழங்காநத்தம் என்ற சிற்றூர் அடுத்து உள்ளது. கோவலன் பொட்டல் இடத்தின் சிறப்பு என்ன?

மதுரை சுற்றுலா தளத்தில் ஒன்று. இந்த இடம் மதுரையின் பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ளது. கோவலன் பொட்டல் அமைந்துள்ள பகுதிகள் கிமு 300 – கிபி 300 இடைப்பட்ட இருந்த சங்க காலத்தில் சுடுகாடாக இருந்தவை.

கண்ணகி, கோவலன் வரலாறு

சிலப்பதிகாரம் படித்தவர்களுக்கு இந்த இடத்தை பற்றி நன்றாக தெரியும். சிலப்பதிகாரத்தில் மதுரை பாண்டிய மன்னனின் ஆணை படி கோவலனின் தலையை இந்த இடத்தில் வைத்துதான் துண்டித்து தண்டனையை நிறைவேற்றி உள்ளனர். இந்த இடம் அமைந்துள்ள பகுதிகள் கிமு 300 – கிபி 300 இடைப்பட்ட இருந்த சங்க காலத்தில் சுடுகாடாக இருந்தவை. கோவலன் உடல் அடக்கம் செய்யப்பட்டதின் காரணமாகவே பிற்காலத்தில் கோவலன் பொட்டல் என அழைக்கப்பட்டுள்ளது. இன்றளவும் இது இடுகாடாகவே உள்ளது.

பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலனை சிறைபடுத்தி மரண தண்டனை வழங்கி கொன்றதால் கோவலனின் உடல் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் பாண்டியர்கள் தங்களின் இடுகாட்டிலேயே அடக்கம் செய்து விட்டதாக மரபு வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே “பாண்டியர் இடுகாடு” “கோவலன் பொட்டல்” என்று அழைக்கப்பட்டுகிறது.

பாண்டியர் இடுகாடு

கே.ஆர்.அனுமந்தன் போன்ற வரலாற்று அறிஞர்களால் கூறப்படும் பழங்காநத்தில் உள்ள “பாண்டியர் இடுகாடு” என்பது இன்று குடும்பர்களின்/பள்ளர்களின் இடுகாடாக இருக்கின்றது. அந்த இடத்தில் “தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட மயானம்” இன்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே ஒரு குலத்திற்கான இடுகாட்டை வேறொரு குலத்தை சார்ந்தவர்கள் பயன்படுத்துவது இல்லை. இது தமிழரின் மரபு வழக்காறகவே இருந்து வருகிறது.

இதை ஆராயும் வகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1980′களில் இங்கு தங்களது ஆராய்ச்சியை தொடங்கி உள்ளனர். அப்பொழுது அவர்கள் அங்கு முன்று பெரிய முதுமக்கள் தாழிகளையும் அதன் உள்ளே மனிதனின் மண்டை ஓடுகளும் இதர எலும்புகளும், மேலும் ஒரு பக்கம் மீனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள பண்டைய பாண்டிய அரச வட்டவடிவ செப்பு நாணயங்களையும் கண்டறிந்துள்ளனர். மேலும், சதுர செப்புக் காசு ஒன்று 45 செ.மீ. ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டது. காசின் ஒரு புறம் மீன் உருவம் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இம்மரபு வழிச் செய்திகளையும், நடப்பியியல்புகளையும் ஒப்பிட்டு பார்க்கும்போது குடும்பர்களே / பள்ளர்களே பாண்டியர் மரபினர்கள் என்னும் வரலாறு உறுதி செய்கிறது.

தலைவெட்டப்பட்ட கல், மற்றும் வெட்டப்பட்ட கோவலன் தலை வடிவ கல் போன்றவை அங்கே உள்ளது. அதைச்சுற்றி செங்கல் வைத்து எழுப்பப்பட்ட சிறு ஆலய மண்டபப் பணி பாதியில் நிற்கிறது. மதுரை செல்வோர் அங்கே சென்று வாருங்கள். இடுகாடு என்பதற்காக அச்சப்பட வேண்டாம்.

பள்ளர்களே பாண்டியர்

இடுகாட்டின் தெற்கு எல்லைப் பகுதியில் வடக்குப் பார்த்துக் கோவலனுக்கும் கண்ணகிக்கும் கோவில் கட்டியிருக்கின்றனர். உருவமில்லாமல் கல் பீடமாக வைத்து வழிபட்டு வருகின்றனர். இவ்வழிபாடனது அன்றுமுதல் இன்றுவரை நடைபெற்றுவருவது வியக்கத்தக்கது. கோவலனின் மரபினர்கள் இன்றைக்கும் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் பழனி மலைக்குப் பக்கத்திலுள்ள ஊர்களில் வசித்து வருவதாகவும் வருடம் ஒரு முறை கோவலனைத் தங்கள் குலதெய்வமாக எண்ணி மயானத்திற்கு வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.

பழங்காநத்தம் குடும்பர்கள் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் பௌர்ணமி இரவு கோவலன் பொட்டல் இடுகாட்டிலுள்ள குழிமேட்டிற்கு வந்து தங்களுடைய மூதாதையர்களின் சமாதியை அலங்கரித்துப் பொங்கல் வைத்து வழிபட்டு வந்திருக்கின்றனர், கடந்த 5 வருடமாக இந்நிகழ்வானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பள்ளர்களின் வரலாற்றை அழிக்கிறேன் என்று எண்ணிக்கொண்ட மடையர்கள் ஒட்டுமொத்த தமிழர்களின் வரலாற்றை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்

chera chola pandya history in tamil pdf

Kovalan Pottal – Historical landmark

மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவலன் பொட்டல். மதுரையில் இறங்கி கோவலன் பொட்டல் எங்கயிருக்கு எனக் கேட்டால் பலருக்கு தெரியவில்லை. அதுவும் இளைய தலைமுறையினர் தெரியாது என்றே பதில் தருகின்றனர். பழங்காநத்தம் பகுதியில் வசிக்கும் ஐம்பது அகவைக்கு மேலானவர்களே வழிகாட்டுகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *