இந்து மதத்திற்கான வரையறையை நாங்கள் சொல்கிறோம். திராவிடத்திற்கான வரையறையா நீங்கள் விளக்க தயாரா? திமுக ஆ.ராஜாவுக்கு – டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி சவால்!

Political Puthiya Tamilagam

இந்து மதம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா பேசிய பேச்சுக்கு, புதிய தமிழகம் கட்சி இளைஞரணித் தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.
கிறிஸ்துவம், இஸ்லாத்தை போல இந்து மதம் நிறுவனமாக்கப்பட்டது அல்ல. It is not instutionalised. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய மண்ணில் தோன்றிய வழிப்பாட்டு முறைகளே ‘இந்து’ மதம். அது இயற்கை வழிப்பாடோ, முன்னோர்களோ, நடுகல், குலதெய்வ முறையோ, வேதமோ கீதையோ எல்லாம் இந்து மதம் தான்!

புதிய தமிழகம் கட்சி இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி’s Tweet 

‘இந்து’ மதத்திற்கு வரையறையும் கேட்கும் ஆ. ராசா திராவிடத்திற்கு என்ன  வரையறை என்று விளக்குவாரா?! 
திராவிடம் என்பது என்ன? இனமா, மொழி சார்ந்ததா, பூகோள நிலப்பகுதியைக் குறிக்கிறதா?
பிராமணர்கள் அல்லாதோர் அனைவரும் திராவிடர்களா?ஆரியர்கள் எல்லோரும் பிராமணர்களா?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *