தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வருத்தத்தை ஏற்படுத்தியதே தவிர, ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை!

Devendra Kula Vellalar

இன்றைய துப்பாக்கிச்சூடு வருத்தத்தை ஏற்படுத்தியதே தவிர, ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை..

இத்தனை நாள் துப்பாக்கிச்சூடு என்ற வன்முறையை வெளியில் இருந்து பார்த்த பொது சமூகம் இன்று தான் நேரில் உணர்ந்திருக்கிறது, இந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்த்தாக செய்தி, (உண்மையாக எத்தனை என்று தெரியவில்லை)

எங்களுக்கு இதெல்லாம் புதியது அல்ல,

1957ல் இருந்து முதுகுளத்தூர், கீழ்வெண்மணி, தேனி, கொடியன்குளம், தாமிரபரணி, மெரினா கடற்கரை, பரமக்குடி வரை அதிகாரவர்க்கம் தமிழகத்தின் தலைக்குடியான தேவேந்திரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடுகள், சூரையாடல்கள், கைகால்களை ஊனமாக்குதல் என பல வன்முறைகளை இந்த தமிழ் சாதி சந்தித்திருக்கிறது, அத்துனை தாக்குதல்களில் இருந்தும் எந்த ஒரு மற்ற தமிழ் சாதிகளோ, எந்த ஒரு பொதுவுடமை பொறுக்கிகளோ எங்களை காப்பாற்றவில்லை, எங்கள் ஓலம் யாருடைய காதிலும் கேட்கவில்லை, நாங்களாகவே சுயம்புவாக எழுச்சியுற்று வந்திருக்கிறோம்,

உழைப்பிற்கேற்ற ஊதியத்தை கேட்டதற்கு, 44 பேர் உயிருடன் கருகினார்கள், பிஞ்சு குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும்,
அப்போது பெரியார் என போற்றப்படும் உத்தமன் எங்களைப் பார்த்து உதிர்த்த வார்த்தைகள் அந்த தீச்சூவாலையைவிட கொடியது

கொடியன் குளம் கதை எல்லோருக்கும் தெரியாதுதான், காவல்துறை சீருடையில் வந்த குண்டர்களால் சூரையாடபட்ட மக்கள், குடிதண்ணீர் கிணற்றில் மலத்தை அள்ளி வீசிய கொடூரம், உண்ணும் உணவை வணங்கும் தமிழர் கலாச்சாரத்தில் வீட்டில் இருந்த அரிசிகளைகூட தெருவில் கொட்டி தீவைத்தனர், டீவிபெட்டிகளும் ரேடியோ பெட்டிகளும் தெருவில், ஏன் என சாதிவெறிக் கும்பல்களின் வெறுப்பு காரணம் சொல்லிமாளாது.

தாமிரபரணியில் உரிமை போராட்டத்தில் நடந்த அரச பயங்கரவாதம் இன்று தூத்துக்குடியில் நடந்தது போன்ற ஒரு தாக்குதல் அரசு கணக்கில் 17 ஆனால் உண்மையில் 50க்கும் மேல். நிராயுதபாணியாக நின்று இறந்தவர்களில் 1.5 வயது பிஞ்சி குழந்தையும் அடக்கம்,

2011 ல் பரமக்குடியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட அரச பயங்கரவாதத்தில் 7 உயிர்களை இழந்தோம்,

ஆனால் அப்போது ஊடகங்கள், பொது சமூகம், பொதுவுடமைகள் எல்லாம் துப்பாக்கி குண்டுகளைவிட வீரியமான வார்த்தை குண்டுகளை கொண்டு தாக்கியது, அதையும் தாங்கிக்கோண்டோம்

ஊடகங்கள் அனைத்தும் வன்முறையாளர்கள் என்று பட்டம் சூட்டியது
பொது சமூகம் பள்ளபயலுகளுக்கு என்ன இவ்வளவு திமிறு என்றது,
பொதுவுடமை புழுத்தகட்சிகள் எல்லாம் நரியை போல ஊலையிட்டது.. அதிலும் பல செந்நாய்களாக எங்களை சுற்றி வந்தன

இவ்வாறான தாக்குதலில் எல்லாம் பாதிக்கப்பட்ட நாங்கள் பொது சமூகத்தை பார்த்து எழுப்பிய ஓலங்கள் எல்லாம் கேலியும் கிண்டலுமாக உங்களிடம் இருந்து திரும்பி வந்தது, அதையும் தாங்கினோம்..

தமிழினம் காக்க, தமிழகம் காக்க இணைவோம் என நாங்கள் கூறும்போதெல்லாம் , உணக்கென்ன தகுதி என ஏளனப்பார்வைகளை வீசிய பொது சமூகம்,

“கழுத்து வலியும், திருகு வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்”

என்ற பழமொழியைப்போல, இத்தனை நாட்கள் நாங்கள் இட்ட ஓலம், அரசபயங்கரவாதம் என நாங்கள் எழுப்பிய கூக்குரல் எல்லாம் இன்று பொது சமூகத்தின் வாயில் இருந்து ஒலிக்கிறது, ஆம் அதே பொது சமூகம்தான் இத்தனை நாட்கள் நாங்கள் சுடப்பட்டபோது ஏளனம் செய்த அதே வாய் தான் இப்போது கதறுகிறது..

தமிழ் சமூகமே இப்போதும் நாங்கள் கூறுவது ஒன்றுதான், கதிரடித்த களத்திலே, நெல் அம்பாரத்தின் உயரத்திற்கேற்ப பதினெட்டு குடிகளுக்கும் படியளந்து மீதம்இருப்பதையே நாங்கள் எடுத்து சென்றோம்,

இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கக்கூடிய சமூகம் அடிமை விலங்கை உடைக்க போராடுகிறது. ஆனால் எங்கள் மீதான தாக்குதல்களை கண்டு எப்படி ஏளனம் செய்தீர்களோ, எப்படி கண்டும் காணாமல் இருந்தீர்களோ, அதே போல் எங்கள் பட்டியல் வெளியேற்றம் கண்டு ஏளனம் செய்யாதீர்கள், கண்டும் காணாமல் இருக்காதீர்கள், எங்களுக்கு துணையாக வாருங்கள்.. இந்த தமிழர்களை காக்கும் மிகப்பெரிய பொருப்பு எங்களிடம் பன்னெடுங்காலமாக இருக்கிறது என்பதை உணர்ந்து இணையுங்கள்…எதிரிகள் உங்களது ஆழ்மனதில் விதைத்துள்ள சாதி ஏற்றத்தாழ்வுகளை தூக்கி எறிந்து தமிழ்சாதி அடையாளத்துடன் வாருங்கள் தமிழ் ஆள வழி வகுப்போம்..

*தேவேந்திரகுல வேளாளர் இணைய செய்தித்தாள்*


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *