எப்பொழுது நம் சமூகம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவது???

Devendra Kula Vellalar devendran business

  • வியாபாரத்தில் மார்வாடிகளும், நாடார்களும் ஜெயிக்கிறார்கள். முன்னோடியாக இருந்த முஸ்லிம்கள் தோற்று போகிறார்கள். ஏன்?*
  • நமது பைத்துல்மால் சிஸ்டம் நாடார்களாலும், சேட்களாலும் பின்பற்றப்படுகிறது. ஒருவர் ஒரு பலசரக் கடை வைக்கிப் போகிறார் என்றால், அந்த இனத்தின் சங்கத்தில் (பைத்துல் மால்) உள்ள பலசரக்குக் கடை வியாபாரம் பார்ப்பவர்கள் அனைவரும் தங்களின் பொருட்களை கடனாக கொடுப்பார்கள்.*

  • ஒருவர் அரிசி தருவார். இன்னொருவர் பருப்பு தருவார். இன்னொருவர் சாம்பு, சோப்பு தருவார். இப்படி ஒவ்வொருவராக பொருளை தந்து, புதிய தொழில் தொடங்குபவரின் கடையை நிரப்புவார்கள். நன்றாக கவனியுங்கள் காசு தரமாட்டார்கள் பொருளாகத் தருவார்கள்.*
  • முதலீடே போடாமல் பெரிய கடை அமைந்து விட்டது. இனி அப்பொருளை விற்று வந்த காசில் லாபத்தை அவர் எடுத்துக் கொண்டு, அசலை மாதா மாதம் தவணையாக சங்கத்தினைச் சார்ந்த வியாபாரிகளிடம் கொடுப்பார். சங்கம் அந்த காசை வளர்ச்சி நிதிக்கு செலவழிக்கும்.*

  • உதாரணமாக, ஒரு கல்யாண மகால் கட்டுவார்கள். அதன் மூலம், காசு காசை சம்பாதித்து தரும். பின்பு லாபத்தின் மூலம் , பள்ளிகள் ,கல்லூரி ஆரம்பிப்பார்கள். இப்படித் தான் நமது பைத்துல்மால் சிஸ்டம் அவர்களிடம் சென்று விட்டது.*
  • ஒருவருக்கு கடை ஆரம்பிக்க முழு பணம் கடனாக கொடுத்தால் தான் சங்கத்திற்கு பண முடக்கம் வரும். ஆனால் ஒரு வியாபாரிடம் 500 கிலோ அரிசி, இன்னொரு வியாபாரிடம் 30 கிலோ பருப்பு என பிரித்து வாங்குவதால் பண முடக்கமே ஏற்படாது.*
  • மக்காவில் இருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த போது, நபி (ஸல்) அவர்கள், மக்காவாசிகளை இதே முறை கொண்டு தான் மதீனாவாசிகளோடு இணைத்தார்கள். அதாவது விவசாயம் தெரிந்த ஒரு மக்காவாசியை, விவசாயம் தெரிந்த மதீனா வாசியிடம் சேர்த்து தங்க வைத்தார்கள். இதன் மூலம் இருவரும் விவசாயம் செய்வார்கள். அதே போன்றுதான் வியாபாரம் செய்பவரோடு வியாபாரம் செய்பவரை இணைத்தார்கள். இதன் மூலம் வழியற்று நின்ற மக்காவாசிகளுக்கு இடமும், உழைத்து அதன் மூலம் வருமானமும் வந்தது. நட்பும் வளர்ந்தது.*

  • மக்காவாசிக்கு தங்க இடம் கொடுத்த மதீனா வாசிகளுக்கு, அவர்கள் மூலம் வந்த வருமானம் அவர்களுக்கு இடமளிக்க நிதியாக உதவியது. இதன் மூலம் புதிதாக வந்தவர்கள் தொழிலில் முன்னேறினர். இது நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழி.*
  • இந்த முறை தான் நம்மிடம் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இன்று நம் சமூகம் அதை பின்பற்றுகிறோமா? நம் நண்பர் புதிதாக தொழில் ஆரம்பித்தால், அங்கு சென்று பொருளே வாங்க மாட்டோம். பின்பு எப்படி ஒரே தொழில் செய்பவர்கள் ஒன்றிணைந்து உதவப் போகிறோம்?
  • பைத்துல் மால் சிஸ்டம் எங்கே? நாம் வியாபாரத்தில் தோற்றதுக்கு காரணம் இது தான். சிந்திப்போமா? வியாபாரத்தில் சாதிக்கும் போது பள்ளி, கல்லூரி என அனைத்தும் உருவாகும் என்பதற்கு நான் மேலே சொன்னதே உதாரணம். அடிவேரை விட்டுவிட்டு, கல்வி நிறுவனம் இல்லையே என்று புலம்புகிறோம். இந்த மாற்றம் உருவாக வேண்டுமானால் ஒரே வழி தான் உள்ளது. சகோதரத்துவம் பேண வேண்டும். சக மனிதன் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் வளர வேண்டும். அப்போது தான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும். பொருளாதாரத்தில் முன்னேறி விட்டால், அரசியல், கல்வி, மருத்துவம் என எல்லாத் துறையிலும் முன்னேற்றம் வரும்.

சகோதரத்துவம் பேணுவோமா? நமக்கென்று வியாபார சங்கத்தை ஏற்படுத்துவோமா?


1 thought on “எப்பொழுது நம் சமூகம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவது???

  1. வியாபார சங்கம் அமைப்பது மிக அவசியமான ஒன்று…
    நான் ஆதரவு தருகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *